உயர் பாதுகாப்பு வலயங்களை உடனடியாக நீக்க முடியாது: லக்ஸ்மன் குலுகல்ல
உயர்பாதுகாப்பு வலயங்கள் உடனடியாக நீக்கப்படமாட்டாது என சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.
கொக்காவில், முகமாலை போன்ற பாதுபாப்பு வலங்களின் சில பகுதிகளிலிருந்து படையினர் வெளியேறியுள்ளபோதும் நாட்டினதும் மக்களதும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பாதுகாப்பு வலயங்களை தொடர்ந்தும் பேணவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கான ஊடகத் துறை ஆணையாளர் லக்ஸ்மன் குலுகல்ல நேற்றையதினம் வடக்கு கிழக்கிலிருந்து கொழும்பிற்கு வருகை தந்துள்ள பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
போர் முடிவடைந்துள்ளபோதும் நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் அரசு எவ்வித விட்டுக் கொடுப்பையும் செய்ய முடியர்து எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு படையினர் தினமும் விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்ட பெருமளவு ஆயுதங்களை மீட்டு வருவதாகவும் இவ் ஆயுதங்ளைக் கொண்டு முன்னாள் போராளிகள் ஆயத கொள்ளைகளில் ஈடுபடும் ஆபத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது, ஊடகவியலாளர்கள் தமது பொறுப்புக்களை உணர்ந்து நடக்கவேண்டுமெனவும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த உழைக்க வேண்டும் எனவும் ஊடக ஆணையாளர் கேட்டுக் கொண்டார்.